புளிய மரம் சாய்ந்து விழுந்ததால் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆனையம்பட்டி பகுதியில் சின்னச்சாமி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் சின்னச்சாமி தனது மோட்டார் சைக்கிளில் தடாவூர் பிரிவு சாலையின் அருகே சென்று கொண்டிருக்கும் போது திடீரென புளியமரம் ஒன்று சின்னச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது சாய்ந்து விழுந்து விட்டது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சின்னசாமி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த கெங்கவல்லி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.