மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் ராமசாமி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி தனது உறவினரான முனியாண்டி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து கொட்டாம்பட்டி நத்தம் பிரிவு சாலையில் சென்று கொண்டிருக்கும் போது விளக்கு போடாமல் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் இவர்களின் மோட்டார் சைக்கிள் பலமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று ராமசாமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.