உடல்நிலை சரியில்லாமல் போனதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அத்திப்பாடி பகுதியில் திருப்பதி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் எப்போதும் சோகமாக இருந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த திருப்பதி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் திருப்பதி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.