Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… விவசாயிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கிணற்றில் மூழ்கி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொடியாளம் கிராமத்தில் பரத்ராஜ் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பரத்ராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து குளித்துக் கொண்டிருந்த போது பரத்ராஜ் திடீரென தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை தொடர்ந்து அவரது நண்பர்கள் கிராம மக்களின் உதவியோடு தண்ணீரில் மூழ்கிய பரத்ராஜை மீட்டு உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பரத்ராஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அஞ்செட்டி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரின் சடலத்தை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |