ஆஸ்திரேலியாவில் ஒரு காட்டு ஆட்டுக்கிடாய் 11.25 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வசிக்கும் ஆண்ட்ரூ மோஸ்லி காட்டு ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவர், அம்மாநிலத்தின் கோபார் நகரில் மரக்கேஷ் என்ற ஆட்டுக்கிடாயை சுமார் 11.25 லட்ச ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்.
அந்நாட்டில், இதற்கு முன்பு ஒரு ஆடு, 12000 ஆஸ்திரேலிய டாலர் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டது தான் சாதனையாக இருந்தது. தற்போது, அந்த சாதனை முறியடிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் ஆண்ட்ரூ தெரிவித்துள்ளதாவது, உலகில் குறைவான அளவில் தான் காட்டு ஆடுகள் இருக்கிறது.
இறைச்சிக்காக, பெரும்பாலான காட்டு ஆடுகள் கொல்லப்படுகின்றன. எனவே தான் அதன் விலை அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். விவசாயிகள் பலரும் ஆடுகளை வாங்கி இனப்பெருக்கம் செய்ய வைத்து வருமானம் ஈட்டி வருகிறார்கள். அந்த வகையில் இந்த முரட்டு ஆட்டுக்கிடாய்க்கு, இனப்பெருக்கம் செய்யும் திறன் அதிகம் இருப்பதால், இவ்வளவு விலைக்கு வாங்கியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.