விவசாயிகள் ரசாயன உரங்களைத் தவிர்த்து, இயற்கையான உரத்திற்காக விளை நிலங்களில் செம்மறி ஆடுகளை மேய விடுகின்றனர்.
திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் 3 போகம் நெல் சாகுபடி செய்து வழக்கமாகும். தற்போது காவிரி நீர் பிரச்சினையாலும், மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாத காரணத்தினாலும், நெல் சாகுபடி 2 போகமாக குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஜுன் 12ஆம் தேதியன்று மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளார். இதனை அடுத்து 32 ஆயிரத்து 800 எக்டேர் பரப்பளவில் விவசாயிகள் தங்களின் நிலத்தை குறுவை சாகுபடிக்காக தயார் செய்து வருகின்றனர்.
அதன்பின் ரசாயன உரங்களின் விலை அதிகமாக இருக்கும் காரணத்தினால், விவசாயிகள் இயற்கை உரங்களுக்கு திரும்பியுள்ளனர். இதனை தொடர்ந்து வெளி மாவட்டங்களில் இருந்து செம்மறி ஆடுகளை வாங்கி தங்களின் விளை நிலங்களின் மீது மேய விடுகின்றனர். அதன்பிறகு அதில் கிடைக்கும் ஆடுகளின் கழிவை இயற்கை உரமாக பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். இதனால் மண்வளம் அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.