Categories
அரசியல் மாநில செய்திகள்

”விவசாயி” புகழ் எடப்பாடி ….! ”குற்றம் செய்த அதிமுக” – ஸ்டாலின் கண்டனம் …!!

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை” தனது ஜலசக்தி துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரும் செயலை முக.ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை” தனது ஜலசக்தி துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து ஒரு பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், தமிழ்நாட்டில் நதிநீர் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிக்கும் மத்திய அரசு ”காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை” தனது ஜலசக்தி துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.

குற்றம் செய்த அதிமுக :

தமிழ்நாட்டின் உரிமைகளை ஒவ்வொன்றாக ஒவ்வொரு கட்டமாக விட்டுக்கொடுத்து நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, உச்ச நீதி மன்றத்தின் இறுதித் தீர்ப்பின் பயன்களை தமிழக விவசாயிகள் அனுபவிக்க விடாது குற்றம் செய்த அதிமுக..

உச்சநீதிமன்றத்தில் உரிய வகையில் வாதிடாமல் 14.7 5 டி.எம்.சி நீரை கோட்டைவிட்டது.

”காவிரி மேலாண்மை வாரியத்தை” கைகழுவி விட்டது.

பல்லில்லாத காவிரி நதி நீர் மேலாண்மை :

நீர்ப் பங்கீடு ”வரைவுத் திட்டத்தை” 6 வாரத்திற்கு உருவாக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மூன்று மாதத்திற்கும் மேலாக மத்திய அரசு தாமதம் செய்த செய்வதை வேடிக்கை பார்த்தது.

உதவாக்கரையான ”காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம்” அமைக்க மத்திய பாஜக அரசுக்கு ஒப்புதல் கொடுத்தது.

பல்லில்லாத காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்திற்கும் முழுநேர தலைவரை நியமிக்காமல் இன்றுவரை முடக்கப்பட்டது.

ஆணையமும், காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவும் மேகதாது அணை திட்டத்தை தடுக்கவோ,  தமிழக விவசாயிகளின் உரிமைகளுக்காகவோ எதுவுமே செய்யவில்லை

இது போதாது என காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமே மத்திய அரசிடம் கைகட்டி நிற்கும் அமைப்பு என்ற நிலை உருவாகியுள்ளது மத்திய அரசு.

”விவசாயி” புகழ் முதலமைச்சர் :

மத்திய அரசு முன்மொழிவதை – வழிமொழிந்து – வேளாண் தொழிலை வஞ்சித்து நிற்கும் ”விவசாயி” புகழ் முதலமைச்சர் திரு எடப்பாடி அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சியை பறிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள முடிவினை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.

24.4.2020 ஆம் தேதியிட்ட அரசிதழ்  திரும்பப் பெறவில்லை என்றால் அரசியல் கட்சிகளையும், விவசாயி பேரமைப்பையும் சேர்ந்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |