Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் செய்த கொடூரம்… வசமாக சிக்கிய குற்றவாளி… போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செந்துறை அருகே விவசாயி கொலை தொடர்பாக மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கரந்தமலையூர் பள்ளத்துகாட்டில் வசித்து வந்த விவசாயியான வெள்ளைக்கண்ணுக்கும், அவருடைய உறவினரான தங்கராஜ் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தங்கராஜ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் பொன்னர், பழனிச்சாமி, சின்னச்சாமி, ராஜாங்கம், முத்து என்ற மீசை ஆகியோருடன் சேர்ந்து கடந்த 29-ஆம் தேதி வெள்ளைக்கண்ணுவை தாக்கியதாக கூறப்படுகிறது.

அதில் வெள்ளைக்கண்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து நத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து சின்னச்சாமி, தங்கராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜாங்கம், பழனிச்சாமி ஆகியோர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இந்நிலையில் முத்துவை நேற்று முன்தினம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |