Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விவசாயி கொலை வழக்கு…. மருமகளின் தம்பி கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில் விவசாயியை உறவினர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிலேப்பள்ளி பகுதியில் விவசாயியான வெங்கடப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வெங்கடப்பன் தனது விவசாய நிலத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது காரில் வந்த மர்ம கும்பலை சேர்ந்த நபர்கள் அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடப்பனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வெங்கடப்பனின் மருமகள் ஜமுனாவின் தம்பியான கார்த்திக் என்பவரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது கார்த்திக்கின் மைத்துனரான முருகேசன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். இதனையடுத்து கார்த்திக்கின் உடன்பிறந்த அக்கா ஜமுனா தனது மகன்களுடன் கிருஷ்ணகிரி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி 3 பேரும் இறந்துவிட்டனர்.

இந்நிலையில் குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் இறந்து விட்டதால் வெங்கடப்பனுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தின் சட்ட உரிமையை பெறுவதற்காக கார்த்திக் முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்கு வெங்கடப்பன் எதிர்ப்பு தெரிவித்ததால் சொத்தை அபகரிக்கும் நோக்கில் கூட்டாளிகளுடன் சேர்ந்து கார்த்திக் அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. அதன் பின் கார்த்திக்கின் கூட்டாளிகளையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |