விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நத்தத்துப்பட்டி பகுதியில் விவசாயியான மாரிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 150-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 50 ஆடுகள் வரை நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாரிச்சாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.