நெல்லை மாவட்டத்தில் வயிற்றுவலியால் துடித்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கீழசெவல்பட்டியில் ராமையா(60) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான ராமையா சில தினங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மனமுடைந்த விவசாயி அவருக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து ராமையா வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து தோட்டத்தில் சென்று பார்த்தபோது ராமையா மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி ராமையா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.