விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் விவசாயியான கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியாருக்கு சொந்தமான ஒரு தோட்டத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக கணேசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த கணேசன் தோட்டத்திற்கு சென்று விஷத்தை குடித்து தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்ற கணேசனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.