Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள தூத்தூர் கிராமத்தில் ராஜராஜன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜராஜன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜராஜனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |