மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ரகுவரன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரகுவரன் தினமும் குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் திடீரென ரகுவரன் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விட்டார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ரகுவரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.