மறைந்த முன்னாள் பிரதமர் சௌதிரி சரண் சிங் பிறந்தாளையொட்டி அவரை நினைகூறும் விதமாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ” 2010-11ஆம் ஆண்டில் ரூ. 91 ஆயிரமாக இருந்த மேற்கு வங்க விவசாயிகளின் ஆண்டு வருமானம், 2018ஆம் ஆண்டில் 2.91 லட்சமாக (மூன்று மடங்கு ) உயர்ந்துள்ளது. அதேபோன்று, 2011ஆம் ஆண்டில் 27 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கிசான் (விவசாயிகள்) அட்டை, 2019ஆம் ஆண்டில் 69 லட்சம் விவசாயிகளுக்கு ( இரண்டரை மடங்கு அதிகம்) விநியோகிக்கப்பட்டுள்ளது.
கிரிஷாக் பன்தூ என்ற திட்டம் மூலம் மேற்கு வங்க அரசு விவசாயிகளுக்கு நிதி உதவியும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 72 லட்ச விவசாய குடும்பத்தினர் பயனடைவர். அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் உதவியின்றி, மாநில அரசு தன்னிச்சையாக பயிர் காப்பீடு திட்டத்தையும் செயல்படுத்துகிறது” என்றார்.
The average annual income of farmers has tripled from Rs 91,000 (in 2010-11) to Rs 2.91 lakh (in 2018). Distribution of Kisan Credit Cards has increased 2.5 times from 27 lakh in 2011 to 69 lakh in 2019. Our Govt in #Bangla is committed to the welfare of farmers #KisanDiwas 2/3
— Mamata Banerjee (@MamataOfficial) December 23, 2019
Our Govt in #Bangla also runs the 'Krishak Bandhu' scheme to give special financial assistance to farmers. About 72 lakh farmer families will benefit from this scheme. We are also running the crop insurance scheme for farmers on our own, without any assistance from Centre 3/3
— Mamata Banerjee (@MamataOfficial) December 23, 2019