தமிழக விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் விவசாயிகள் நலனுக்கான பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருந்தது. குறிப்பாக மத்திய அரசு கொண்டுவந்த புதிய மின் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரமும் இதே போல பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ள நிலையில் தற்போது அது தொடர்பான பல வலியுறுத்தலை தமிழக முதல்வர் கடிதம் வாயிலாக தெரிவித்திருக்கின்றார்.
மத்திய அரசு அறிவித்த சுயசர்வு திட்ட அறிவிப்புக்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ள்ளார். விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் முடிவை தமிழக அரசிடமே விட வேண்டும் என்று தெரிவித்துள்ள முதல்வர் மாநில கடன் வரம்பை உயர்த்த மத்திய அரசு விதித்த நிபந்தனைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார்.
புதிய மின் திருத்தச் சட்டத்தில் தமிழர்களின் உரிமைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார திருத்தச் சட்டத்தால் விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மொத்தத்தில் விவசாயிகளுக்காக தமிழக முதல்வர் மத்திய அரசை கண்டித்துள்ளது பலரின் பாராட்டை பெற்றுள்ளது.