Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நூதன முறையில் விவசாயிகள் போராட்டம்… ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!!!!

திருவண்ணாமலையில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பாக உழவர் பேரவை விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டத்திற்கு வாக்கடை புருஷோத்தமன் தலைமை தாங்க விவசாயிகள் பொம்மையை வைத்து பில்லி சூனியம் செய்வது, குரங்கு வித்தை என நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன்பின் விவசாயிகள் தெரிவித்துள்ளதாவது, சென்ற 12ஆம் தேதி முதல் 60 நாட்கள் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு விற்பனை மற்றும் உற்பத்தி தடை செய்ய அரசு ஆணை வெளியிட்டது.

ஆனால் தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு தான் வருகின்றது. சென்ற காலங்களில் கலப்பட உரங்கள் மற்றும் பயோ உரங்கள் தயாரிப்பதை விவசாயிகள் தடை செய்ய கோரி கோரிக்கை வைத்தோம். அதிகாரிகள் வியாபாரிகளுடன் நட்புறவு கொண்டு சில்லரை உற வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மீது பயோ உரத்தை திணைத்தது போல தற்போது தமிழக அரசின் உத்தரவை செயல்படுத்தாத நிலையை கண்டிக்கின்றோம் என தெரிவித்தனர். இதையடுத்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதன்பின் கோரிக்கை மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்தார்கள்.

Categories

Tech |