யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருவதால் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் மணிலா, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் பயிர் வளர்க்க தேவையான உரங்களை வாங்க செல்லும் போது அப்பகுதியில் உள்ள ஒரு கடைகளில் யூரியா இல்லை என தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு சில கடைகளில் கூடுதல் விலை கேட்பதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். இதனால் விவசாயிகள் கூறும் போது உரக் கடை உரிமையாளர்கள் விற்பனை மனையை எயந்திரத்தின் மூலமாக பயனாளிகளின் ஆதார் எண்ணை பதிவு செய்து விவசாயிகளுக்கு உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள்.
இதனையடுத்து சில கடைகளின் உரிமையாளர்கள் முறையாக பதிவு செய்யாமல் உரங்களை விற்பனை செய்து வருகின்றனர். அதன்பின் கடை உரிமையாளர்கள் நிறுவனத்திடம் யூரியா கேட்ட போது உங்களுடைய விற்பனை முனை எயந்திரத்தில் உங்களுக்கு யூரியா இருப்பு உள்ளதாக காண்பிக்கிறது என கூறி உரம் தருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு சில கடைகளில் மட்டுமே யூரியா உள்ளதால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தும் வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து உரக்கடை உரிமையாளர்கள் விற்பனை முறையை எயந்திரத்தில் பதிவு செய்யாமல் விற்பனை செய்ததினாலும் அல்லது இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்ததாலும தற்போது விவசாயிகளின் பயிர்களுக்குத் தேவையான யூரியா தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. மேலும் உரக்கடைகளை வேளாண் அதிகாரிகள் முறையாக கண்காணித்து விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.