Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. விவசாயிகள் சங்கத்தினரின் போராட்டம்…. கோவையில் பரபரப்பு…!!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேட்டைக்காரன்புதூர் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட பழைய ஆயக்கட்டு கால்வாய்களில் வண்டிப்பாதை சாலைகளை சீரமைக்க வேண்டும் எனவும், பழுதடைந்த அனைத்து மடைகளையும் சீரமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |