வாழை, மரவள்ளி கிழங்கு விவசாயம் பயிர் காப்பீடு செய்யலாம் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் ரமேஷ் செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள செம்பனார்கோவில் பகுதியில் பயிரிடப்படும் வாழை, மரவள்ளி கிழங்குக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
செம்பனார்கோவில் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த வாழை மற்றும் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படும் மகசூல் இழப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க வாழைப்பயிருக்கு ஏக்கருக்கு 3,365, மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு ஏக்கருக்கு 1,017 பிரீமிய தொகை செலுத்த வேண்டும். இதை வரும் 2023-ம் வருடம் பிப்ரவரி மாதம் 23-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தை குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தலாம். பயிர் காப்பீடு செய்ய தேவையான ஆவணங்கள், ஆதார் அட்டைகள் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் உள்ளிட்டவற்றை கொடுத்து பதிவு செய்யலாம். இத்திட்டம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம் என கூறப்பட்டிருக்கின்றது.