Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சார்… இதுதான் எங்க பொழப்பு…. ப்ளீஸ் செஞ்சுகொடுங்க…. விவசாயிகள் கோரிக்கை ..!!

நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தருமாறு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பகுதி விவசாயிகள் இணைந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் முத்துசாமிபுரம், மேட்டுப்பட்டி, சேத்தூர் மற்றும் சோலைசேரி போன்ற கிராமங்களில் சுமார் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருக்கின்றது.

இந்நிலையில் நெற்பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு அமைக்கப்படும் நெல் கொள்முதல் நிலையம் சேத்தூரில் அமைக்கப்பட்டால் விவசாயிகளுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே சேத்தூரில் கொள்முதல் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |