Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தண்ணீர் இன்றி கருகும் பயிர்கள்… அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!!

அம்பாசமுத்திரம் அருகே தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவிற்கு உட்பட்ட வாகைகுளம் மற்றும் மன்னார்கோவில் கிராமங்களில் சுமார் 650 ஏக்கர் பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது வாகைகுளம் சீர்பாதம்குளம், சுமைதாங்கிகுளம், ஞானபட்டர்குளம் ஆகிய குளங்களின் மூலம் நீர் எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வாகைகுளம், சீர்பாதம்குளம், சுமைதாங்கிகுளம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் சுமார் 90 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதாகவும் இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |