Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. உங்களுக்கு இன்னும் 2000 ரூபாய் பணம் வரவில்லையா…. அப்போ உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பி எம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இறுதியாக கடந்த மே 30ஆம் தேதி 11 வது தவணை படம் வழங்கப்பட்ட நிலையில் 4 மாதங்களுக்கு ஒரு முறை பிரதமர் கிசான் தவணைத் தொகை 2000 ரூபாய் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் 12வது தவணை பணத்தை பிரதமர் மோடி விடுவித்தார்.

இந்நிலையில் சில விவசாயிகள் பன்னிரண்டாவது தவணை பணம் இன்னும் வந்து சேராமல் இருப்பதாக கூறி வருகிறார்கள். அப்படி பணம் வராத விவசாயிகள் [email protected] அல்லது [email protected] ஆகிய இமெயில் முகவரிக்கு புகார் தெரிவிக்கலாம். இல்லாவிட்டால் 011-24300606, 155261, 1800-115-526 ஆகிய எங்களைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |