விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியபுரம், கூமாபட்டி, மகாராஜபுரம், கன்சாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வத்திராயிருப்பு பகுதியில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அரசின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.