பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்து வருவதால் தங்களது குழந்தைகள் பசியால் வாடும் சூழல் நிலவியுள்ளதாக அந்நாட்டு விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானின் பல பகுதிகளில் வெட்டுக்கிளிகள் கூட்டம் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்து வரும் நிலையில் பாகிஸ்தான் இதனை தடுப்பதற்கு சீனாவின் உதவியை நாடியுள்ளது.
இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாண பகுதிகளில் விளைநிலங்களுக்குள் புகுந்த வெட்டுக்கிளிகள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோதுமை பயிர்களை தின்று அழித்து நாசம் செய்து விட்டதாக அப்பகுதி விவசாயிகள் கூறியுள்ளனர்.
மேலும் பயிர்களை வெட்டுக்கிளிகள் அழித்து விட்டதால் தங்களது குழந்தைகள் பசி பட்டினியால் வாடும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.