Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இங்கத்தான் வாங்கனும்… பேருந்து நிலையத்தில் சந்தை… தற்காலிகமாக செயல்படும் என அறிவிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிக உழவர் சந்தை இயங்கி கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் மளிகை கடைகள், காய்கறி கடைகள் மதியம் 12  மணி வரை மட்டும் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சந்தைப்பேட்டையில் உழவர் சந்தை இயங்கி கொண்டிருந்தது.

தற்போது அந்த உழவர் சந்தை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தும் இடத்தில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த சந்தையில் ஏராளமான வியாபாரிகள் விற்பனை செய்துள்ளனர்.

Categories

Tech |