திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றுகூடி வேளாண்மைக்கு தனி பட்ஜெட் கோரி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த 20 ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த வரி இரண்டு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்த நிலையில், உழவர்களுக்கு பாசன மின்சாரம் மற்றும் காப்பீட்டு நெல் கரும்பு ஊக்கத்தொகை நல வாரியம் கடன் தள்ளுபடி மானியம் பெற 6,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், திட்டமில்லாத செலவும் வேளாண் உழவர்களுக்கு 4,400 கோடி ரூபாய் திட்ட செலவு ஒதுக்கீடு என மொத்தம் 10,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது 2.3 விழுக்காடு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே விவசாயத்துக்கு தனி பட்ஜெட் வேண்டும். இதில் தெலங்கானா மாநிலம் போல் ஏக்கருக்கு எட்டாயிரம் ரூபாய் மானியம், தீவன மானியம் எட்டாயிரம் ரூபாய் வழங்கி நூறுநாள் பணிகளைப் பராமரிப்பதற்கு வழங்க வேண்டும்.
மேலும் மாதந்தோறும் விவசாயிகள் மாவட்ட குறைதீர்வு கூட்டம் போல ஆறு மாதத்திற்கு ஒருமுறை முதலமைச்சர் தலைமையில் விவசாயிகள் கூட்டம் பட்ஜெட் தயாரிப்பதற்கு கருத்து கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவர்களுக்கு கொடுத்த மனுவில் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.