பிரித்தானியாவில் பல ஆயிரம் லிட்டர் பாலை டிரக்குகள் கிடைக்காத காரணத்தினால் சாக்கடையில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் பால் உற்பத்தியாளர்கள் கனரக ட்ரக் வாகனங்கள் பற்றாக்குறையால் தாங்கள் உற்பத்தி செய்த ஆயிரக்கணக்கான லிட்டர் பாலை வீணாக சாக்கடையில் கொட்டும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு அத்தியாவசிய பொருள்களுக்கும் டிரக் வாகனங்கள் பற்றாக்குறை காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் காலகட்டத்திலும் பால் ஏராளமாக வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பிரித்தானியாவில் விவசாயிகள் தாங்கள் பண்ணையில் உற்பத்தி செய்த பாலை சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் பற்றாக்குறை காரணமாக 40 ஆயிரம் லிட்டர் பாலை வீணாக கீழே கொட்டியுள்ளனர். இந்த தகவலை இங்கிலாந்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர் ஒருவர் கூறியுள்ளார். இதற்கிடையே குளிர்காலத்தில் பனி பொழிவு அதிகமாக இருக்கும். எனவே பாலை கொண்டு செல்லும் வாகனங்களும் இன்னும் மெதுவாகவே செயல்படும். எனவே நிலைமை இன்னும் மோசமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.