Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எப்போ குடுப்பீங்க… சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க… மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்….!!

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கீழநத்தம், வால்காரமேடு, கண்ணங்குடி மற்றும் ஆடூர் போன்ற 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டது. இதனையடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு மழைநீரில் மூழ்கி அழுகிய பயிர்களை கணக்கெடுக்கும் பணியானது இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த விவசாயிகள் அழுகிய பயிர்களுடன் மூத்த கவுன்சிலர் ரமேஷ் என்பவரின் தலைமையில், சிதம்பரம் புறவழிச்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிதம்பரம் தாலுகா போலீசார் காவிரி பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் இளங்கீரன், நிர்வாகிகள் சம்பந்தமூர்த்தி மற்றும் திருவரசு போன்ற விவசாயிகளை சாலையில் இருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கும் போது, அவர்கள் சாலையில் படுத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் மற்றும் சிதம்பரம் சமூகநல தாசில்தார் செல்வகுமார் போன்ற அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களைக் கணக்கெடுத்து முறையாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து  விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

Categories

Tech |