Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அவங்களுக்கு துணையா நாங்க நிற்போம்… போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்… கைது செய்த காவல்துறை…!!

டெல்லியில் போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் வினோத் குமார் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்த போராட்டம் வாழ்க விவசாயிகள் சங்க தலைவர் காளிராஜ் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது.

மேலும் இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் விஜய முருகன், முன்னாள் விவசாயிகள் மாவட்ட செயலாளர் சுப்புராஜ், தாலுகா செயலாளர் சாமிநாதன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். அப்போது டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் எனவும், விவசாயிகள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்ததோடு, அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர். இதனால் சாத்தூர் டவுன் போலீசார் அனுமதி இன்றி சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய சங்க அமைப்பினரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |