Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

10 அம்ச கோரிக்கைகள்…. செம்மண் தின்று போராடிய விவசாயிகள்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நுதன முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்த்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் விவசாயிகள்  10 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெரம்பலூர் மாவட்ட சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு இடம் வழங்கிய உழவர்கள், உரிமை மீட்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இராவணன், ஒருங்கிணைப்பாளர் தங்க.சண்முகசுந்தரம் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் வாழை இலையில் சின்னவெங்காயம், செம்மண்கட்டி, சாத்துக்குடி போன்றவற்றை சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக இடம் வழங்கிய உழவர்களுக்கு இழப்பீடு தொகை அல்லது இடத்தை ஒப்படைக்க வேண்டும். இதனையடுத்து குன்னம் அருகே வேளாண்மை கல்லூரியை நிறுவ வேண்டும் எனவும், பாதியில் நிறுத்தப்பட்ட பெரம்பலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து மக்காச்சோளம், பருத்தி போன்றவற்றிற்கு நேரடி கொள்முதல் நிலையங்களை துங்கபுரத்தில் ஏற்படுத்த வேண்டும்.

மேலும் வேப்பூரில் பேருந்து நிலையம் கட்ட வேண்டும் எனவும், அதற்கு அருகிலேயே சிறுவர் பூங்காக்கள் அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். அதோடு தமிழ் தாத்தா உ.வே.சா -க்கு குன்னத்திலும், வே.ஆணைமுத்துவுக்கு முருகன்குடியிலும் மணிமண்டபம் கட்ட வேண்டும். இவ்வாறாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |