நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பயிர்களுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வெத்தலகாரன்பள்ளம், ஜீவா நகர், ராஜகிரி, சொரக்கையன் கொள்ளை போன்ற கிராமங்களில் தென்னை, வாழை, ராகி, சோளம், கரும்பு, மஞ்சள், நெல் போன்றவற்றை விவசாயிகள் அதிகமாக பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் சிப்காட் தனிப் பிரிவு அலுவலர்கள், வருவாய் துறையினர் மற்றும் சர்வேயர்கள் ஒன்றிணைந்து இந்த கிராமங்களில் இருக்கும் விவசாய நிலங்களை சிப்காட்டிற்காக கையகப்படுத்துவதற்கு சென்றுள்ளனர்.
இதனையடுத்து விளை நிலங்கள் உள்ள இடங்களையும், வீடுகளையும் அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு கொண்டிருப்பதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் நெற்பயிர்கள், பட்டுப்பூச்சி செடிகள் போன்றவைகளுடன் மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அளவீடு செய்யும் பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.