Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இதெல்லாம் வேணும்… நூதன முறையில் போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

விவசாயிகள் சாலையில் பாலை ஊற்றி தங்களின் கோரிக்கைகளை தமிழக அரசிற்கு முன்வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொருளூர் பகுதியில் தமிழ்நாடு விவசாய சங்க சார்பில் வேளாண் சட்டத்தை கைவிட வேண்டும் என போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் பாலின் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என பாலை சாலையில் ஊற்றி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இவ்வாறாக பல்வேறு கோரிக்கைகளை அரசிற்கு முன்வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் விவசாய சங்க துணைத் தலைவரான முருக சாமியின் முன்னிலையில் போராட்டமானது நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து திண்டுக்கல் மாவட்ட செயலாளரான கே.ஆர்.கணேசன் தலைமையில் தலைமை தபால் நிலையத்தில் முன்பு சி.ஐ.டி.யூ போராட்டமானது நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் தொழிற்சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து குளத்துரோடு ரவுண்டானா பகுதியில் விவசாய சங்க நிர்வாகியான செல்வராஜ் முன்னிலையில் போராட்டமானது நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கையை தமிழக அரசிற்கு முன் வைத்துள்ளனர்.

Categories

Tech |