Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மத்திய அரசுக்கு கண்டனம்…. விவசாயிகள் சங்கத்தினரின் போராட்டம்…. திருப்பூரில் பரபரப்பு…!!

தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் அண்ணாசிலை அருகில் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் காளிமுத்து என்பவர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார்.

இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் செயலாளர் சுப்பிரமணியம், மாவட்டத் தலைவர் கதிர்வேல் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |