விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மேகதாது அணையை கட்ட விடாமல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களின் உரிமைகளை பறிக்கும் விதமாக மேகதாது அணையை கட்ட முயலும் கர்நாடக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய அரசின் டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பாக இம்மாவட்டத்தின் சாலை பகுதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உலகத் தமிழ் கவிஞர் பேரவையின் பொதுச் செயலாளர் சீதா தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து அம்பேத்கர், பிரகாஷ், அய்யா மோகன் ஆகிய ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் முத்தமிழ் சங்கத் தலைவரான பழனியப்பன் என்பவருடன் இணைந்து கோவிந்தன் மற்றும் சக்திவேல் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டம் பற்றி உரையாற்றியுள்ளனர்.