விவசாயிகளின் இந்த ஆவேசத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்களின் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக விவசாயிகள் இன்று டெலல்லியில் பேரணி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போலீசார் வைத்திருந்த தடுப்பணையை மீறி நுழைந்ததாக போலீசார் விவசாயிகளின் மீது தடியடி நடத்தியதால் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகளிடையே ஆவேசத்தை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து தடியடி நடத்தப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பேரணி நடத்த அனுமதி அளித்துவிட்டு சாலைகளில் தடையங்கள் வைத்து போலீஸ் தடுத்தது, எதிர்த்து நின்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு, கடுமையான தடியடி நடத்தியது எல்லாவற்றுக்கும் மேலாக 62 நாட்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டும் அரசு மெத்தனமாக விரைந்து முடிவெடுக்காமல் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளது விவசாயிகளுக்கும், காவலர்களுக்கும் இன்று நடக்கும் மோதலுக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.