Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு நிவாரண நிதி… அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தொடர்ந்து இயற்கை பேரிடர் காரணமாக விவசாயிகளின் நலன் கருதி அரசு சார்பில் பல்வேறு இலவச மற்றும் நிவாரண நிதியை வழங்கி வருகிறது.

தற்போது புதிதாக அரசு சார்பில் விவசாயிகளுக்கு புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மானாவாரி மற்றும் நீர் பாசன வசதி பெற்ற விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 13 ஆயிரத்து 500 லிருந்து 20,000 வரை உயர்த்தி தமிழக அரசு வழங்க உத்தரவிட்டுள்ளது. நீர் பாசன வசதி பெற்ற மற்ற பயிர்களுக்கு 13 ஆயிரத்து 500 லிருந்து 20,000 ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

பல ஆண்டு கால பயிர்களுக்கு நிவாரண தொகை 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை உயர்த்தி தர இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் இலவச மற்றும் நிவாரண நிதியை விவசாயிகள் முறையாக பயன் படுத்தி வறுமையை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

Categories

Tech |