Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு…. அனுமதி இல்லாம ஊர்வலமா….? 200 பேர் மீது பாய்ந்த வழக்கு….!!

அனுமதியின்றி ஊர்வலத்தில் ஈடுபட்டதால் 200 பேர் மீது காவல் துறையினர்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பினர் ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்த ஊர்வலத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாகவும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த ஊர்வலம் உரிய அனுமதியின்றி நடைபெற்றதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 200 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |