திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து குறைகளை கேட்டறிந்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் இரண்டாவது நாளாக பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். இந்நிலையில் பெருங்குடி பகுதியில் உள்ள வாழை தோட்டத்தில் விவசாயிகளை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசு கல்வியை இலவசமாக மாணவர்களுக்கு அளித்து வருகிறது. தற்போது மருத்துவ மேற்படிப்புக்கு ஏழை மாணவர்கள் படிக்கும் வகையில் உள் ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளது. ஆகவே விவசாய மக்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் மட்டுமே போதும்.
டெல்டா பகுதியில் கொடுக்கும் அதே முக்கியதத்துவம் திருச்சி மேற்கு பகுதி விவசாயிகளுக்கும் கொடுக்க வேண்டும். வாழை என்பது ஒரு வெள்ளாமை. எனவே லாலாபேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சில சலுகைகள் இருக்கிறது. மேலும் வாழைப்பட்டையிலிருந்து துணி தயாரிக்கலாம் என்று மயில்சாமி அண்ணாதுரை கூறினார். எனவே அவரின் தலைமையில் வாழைப்பட்டையிலிருந்து துணி தயாரிக்கும் கம்பெனி ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.