Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“மத்திய அரசின் நலத்திட்டங்களை செயல் படுத்தக்கோரி விசாயிகள் தூங்கும் போராட்டம் “அரியலூரில் பரபரப்பு !!…

அரியலூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் நூதன முறையில் தூங்கும் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

மத்திய அரசானது விவசாயிகளுக்காக ஆண்டுக்கு ரூபாய் 6000 வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது இந்த திட்டத்தை 4 மாதங்களுக்கு ஒருமுறை 2000 என 3 தவணையாக விவசாயிகளுக்கு 6000 செலுத்தப்படும் என்று அறிமுகப்படுத்தப்பட்டது இந்நிலையில் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கிராமம் அருகில் உள்ள பல விவசாயிகளுக்கு இந்தப் பணம் முறையாக  வழங்கப்படவில்லை என்றும் ,ஒரு சிலர் மட்டுமே இந்தத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வருகின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு சில விவசாயிகள் முதல் தவணை 2000 பெற்று அதன் பின் இரண்டாவது தவணை2,000 ரூபாயும் பெற்று விட்டனர். ஆனால் பலருக்கு இன்னும் முதல் தவணை 2000 ரூபாய் கூட வந்து சேரவில்லை என்று பலமுறை புகார் அளித்துள்ளனர் ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கீழ் பழுவூர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகை செய்து தூங்கும் போராட்டத்தை நடத்தினார்.

சம்பவத்தை அறிந்த தாசில்தார் ,வருவாய் ஆய்வாளர் , காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதனை அடுத்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி வட்டாட்சியரிடம் ஒப்படைத்த பின் அதை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் விரைவில் பணம் தருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதியளித்துள்ளார் இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

Categories

Tech |