குளக்கரையில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் இணைந்து மணல் மூட்டைகளை வைத்து அதனை அடைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குலையநேரி கிராமத்திற்கு தெற்கு பகுதியில் சின்னரெட்டை குளம் அமைந்துள்ளது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக இக்குளம் நிரம்பிவிட்டது. இதனையடுத்து பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருக்கும் இக்குளத்தை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வீரகேரளம்புதூர் தாசில்தார் முருகு செல்வி ஆகியோர் அடிக்கடி கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மறுகாலின் மேல் புறத்தில் அதனை ஒட்டி அமைந்துள்ள கரையின் ஒரு பகுதி மண் சரிந்து குளத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதுபற்றி உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர் அதோடு மணல் சரிந்து விழாமல் இருப்பதற்காக மணல் மூட்டைகளை வைத்து விவசாயிகள் அடைத்தனர்.