Categories
மாநில செய்திகள்

பயிர் கழிவுகளை எரித்த விவசாயிகள்…… காற்று மாசை சுட்டி காட்டி…… ரூ92,500 அபராதம்….!!

கோதுமை பயிர் கழிவுகளை எரித்ததாக பஞ்சாபில் 28 விவசாயிகளுக்கு 92,500ரூபாய் அபராதம் விதித்து அம்மாநில காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, போன்று பஞ்சாப் மாநிலமும் காற்று மாசு அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் காற்று மாசை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிரம் காட்ட உள்ளது. இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் பயிர்களை விவசாயிகள் எரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

Image result for பயிர் கழிவுகள் எரிப்பு

இந்நிலையில் பதேர் சாகிப் என்கின்ற கிராமத்தில் கோதுமை பயிர் கழிவுகள் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் ஆய்வு செய்த காவல்துறையினர் பயிர்க் கழிவுகளை எரித்ததாக கூறி விவசாயிகளுக்கு மொத்தம் 92,500 ரூபாய் அபராதம் விழிகளுடன் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |