Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாடிய பயிரை கண்டு வாடும் விவசாயிகள்….. நடவடிக்கை எடுக்குமா..?? தமிழக அரசு…!!

நாகை  மாவட்டத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் கருகி கொண்டிருக்கும் பயிர்களை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சீர்காழி சுற்றுவட்டாரங்களில் கடந்த 10 ஆண்டுகளாக மேட்டூர் நீர் வராததாலும் மழை பொய்த்து போனதாலும் முப்போகம் விளைந்த பகுதியில் தற்போது ஒரு போகம் விளைய வழி இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த ஆண்டு மேட்டூர் அணை விரைவில் நிரம்பியது. இதனால் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி திறக்கப்பட்டது.

Image result for கருகும் பயிர்கள்

இதனை நம்பி கடைமடை பகுதியான நாகை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் இந்த ஆண்டு சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நேரடி விதைப்பு மற்றும் நடவு பணியை மேற்கொண்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தற்போது சீர்காழி கொள்ளிடம் மகேந்திரபள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரின்றி வயல்கள் வெடித்து சுமார் 50 ஏக்கரில் நெற்பயிர் கருகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

Image result for கருகும் பயிர்கள்

மேலும் குடிமராத்து திட்ட பணிகள் காலதாமதமாக நடைபெறுவதாகவும் பாசன வாய்க்கால்களில் பாலங்கள் கட்டும் பணிகள் காடு மண்டிக் கிடக்கும் கிளை வாய்க்கால் தூர்வாரும் பணிகள் உள்ளிட்டவை நடைபெற்று வருவதால் தண்ணீர் வரும் பாதையின் குறுக்கே மண் போட்டு மூடப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாக கூறும் விவசாயிகள் சீர்காழி சுற்றுவட்டாரங்களில் கருகும் பயிர்களைக் காப்பாற்ற தண்ணீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.

Categories

Tech |