தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இன்று நாடுமுழுவதும் தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் நமக்கு தினமும் உணவளிக்கும் விவசாயிகளைப் போற்றுவது மிகவும் அவசியம். அதன்படி இன்று விவசாயிகள் தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், “உலகின் தலையாய தொழிலாக உழவுத் தொழில் செய்து வரும் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த ‘தேசிய விவசாய தின வாழ்த்துக்கள்’ அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். உலகுக்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன்”என்று அவர் தெரிவித்துள்ளார்.