ஆவணங்கள் மட்டுமல்லாமல் நகைகளை வைத்து பயிர் கடன்கள் பெற்ற விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார் .
மதுரை பைக்காரா மேட்டு தெருவில் பன்னிரண்டு லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே . ராஜு பங்கேற்றார் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, ஆவணங்கள் மட்டுமல்லாமல் நகைகளை வைத்து பயிர் கடன்கள் பெற்ற விவசாயிகளுக்கு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தார் .
முதலமைச்சர் அனைத்து பந்துகளையும் சிக்ஸர் அடித்து வருவதால் ஸ்டாலின் புலம்பி வருகிறார் எனவும், பாஸ்ட் பால், ஸ்பின் பால் என அனைத்து பந்துகளையும் அடித்து வருகிறார் எனவும் முதலமைச்சர் நடவடிக்கையால் ஸ்டாலின் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகிறார் எனவும் கூறினார்.