Categories
தேசிய செய்திகள்

“வேகமாக பரவும் புதிய வைரஸ்”… துணி மாஸ்க் எல்லாம் பத்தாது…. இதை யூஸ் பண்ணுங்க…!!

புதிய வகை கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அதற்கு துணி மாஸ்க் நம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு போதாது என்று நோய் கட்டுப்பாட்டு தலைவர் கூறியுள்ளார்.

வேகமாக பரவி வரும் புதிய வகை வைரசில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள மக்களும் தாங்கள் அணியும் மாஸ்க்கின் தரத்தை அதிகரித்து கொள்வது அவசியமாகும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர்.டாம் பிரண்டன் அறிவுறுத்தி உள்ளார். 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உலகம் முழுக்க பரவ துவங்கிய கொரோனா வைரசின் தாக்கத்தால் இதுவரை கோடிக்கணக்கான பேர் உயிரிழந்துள்ளனர்.

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அதனை செலுத்தும் உலகம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் உயிரிழப்புக்களை தடுக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு தான் வருகிறது.

கொரோனா வராமல் தடுக்க சர்ஜிக்கல் மாஸ்க் அணியலாம். அதற்கு மேல் துணி மாஸ்க் அணியலாம். பல அடுக்குகளைக் கொண்ட துணி மாஸ்க் பயன்படுத்தலாம். அல்லது என் 95 ரக மாஸ்க்குகளை பயன்படுத்தலாம் என நிபுணுர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

Categories

Tech |