இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்து கிடப்பது பிரச்சினையாக இருந்து வந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பாஸ்டேக் கட்டண முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் இந்த கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம் என்பதனால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. பல வாகனங்கள் பாஸ்டேக் முறைக்கு மாறியிருந்தாலும் அந்த அக்கவுண்டில் ரீசார்ஜ் செய்யாமலிருப்பது, செயல்படாத பாஸ்டேக் வைத்திருப்பது போன்ற பிரச்சினைகளும் இருக்கின்றன.
இந்திய டோல் பிளாசாக்களை FasTag வசதி பெருமளவு வாகன நெரிசலை குறைத்துள்ளது. ஆனாலும் இதைவிட மேம்படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் நிற்க வேண்டிய அவசியமே இல்லாத டோல் பிளாசாக்களை அரசு நிறுவ உள்ளது. அதன்படி APNR எனப்படும் இந்த புதிய வசதி நம்பர் பிளேட்டுகளை ஸ்கேன் செய்து அதன் மூலம் வங்கிகளில் இருந்து தானாக பணத்தை எடுத்துக் கொள்ளும். இதனால் டோல் பிளாசா என்ற ஒன்றே தேவையில்லை.