Categories
தேசிய செய்திகள்

FASTag பயன்படுத்துவோர் கவனத்துக்கு… இந்த தப்பை செஞ்சிடாதீங்க…. ரெண்டு மடங்கு ஃபைன் கட்டணும்…!!!

டோல்கேட்டில் ஃபாஸ்டாக் மூலமாக பயணிக்கும்போது இந்த விதிமுறைகளை நீங்கள் மீறினால் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

இந்திய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையாக காத்துக் கிடந்தது. சுங்க கட்டணம் செலுத்துவதில் தாமதம், சிலரை வழங்குவதில் சிக்கல் போன்ற பல்வேறு பிரச்சினைகளால் மணிக்கணக்கில் டோல்கேட்டில் வாகனங்கள் வரிசையில் காத்து கிடந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஃபாஸ்டாக் கட்டண முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் ஃபாஸ்டாக் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் நம்மால் எடுத்துக்கொள்ள முடியும். பிப்ரவரி 15ஆம் தேதி முதல் இந்த முறை அமலுக்கு வந்தது. ஆனால் இன்னும் பல வாகனங்கள் ஃபாஸ்டாக் முறைக்கு மாறாமல் பயன்படுத்தி வருகின்றனர். அப்படி ஃபாஸ்டாக் முறைக்கு சில வாகனங்கள் மாறி இருந்தாலும் அந்த அக்கவுண் ரீசார்ஜ் செய்யப்படாமல் இருப்பது மேலும் பிரச்சனையை ஏற்படுத்துகின்றது.

எனவே ஃபாஸ்டாக் பயன்படுத்துபவர்கள் முக்கியமாக இந்த ஐந்து விஷயங்களை கவனத்தில் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்

  1. ஃபாஸ்டாக் இல்லாமல் டோல்கேட்டில் வாகனத்தை ஓட்டிச் சென்றால், நீங்கள் செலுத்தவேண்டிய தொகையை விட இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
  2. குறைந்த கட்டணம் காரணமாக உங்கள் ஃபாஸ்டாக் வேலை செய்யவில்லை என்றாலோ? ஃபாஸ்டாக் சேதமடைந்து இருந்தாலும் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
  3. உங்களது வாகனத்துக்கு மூன்றாம் தரப்பு காப்பீடு எடுத்திருந்தால் அதற்கு ஃபாஸ்டாக் தேவைப்படும். இந்த புதிய விதிமுறைப்படி உங்கள் காருக்கு காப்பீடு எடுக்கும்போது ஃபாஸ்டாக்கிலும் கவனம் செலுத்த வேண்டி இருக்கும்.
  4. ஒரு ஃபாஸ்டாக்கை வேறு வாகனங்களுக்கு பயன்படுத்தக்கூடாது. ஒரு ஃபாஸ்டாக் ஒரு வாகனத்துக்கு மட்டுமே. உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் இருந்தால், ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்தனியாக ஃபாஸ்டேக் பொருத்த வேண்டும்.
  5. நீங்கள் ஒரு குறிப்பிட்ட சுங்கச் சாவடி வழியாக தொடர்ந்து அல்லது அடிக்கடி பயணம் செய்தால் மாதாந்திர பாஸ் பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது.

Categories

Tech |