தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து, அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், இந்த பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வருவேன் எனவும் சமந்தா தெரிவித்தார். இந்நிலையில், இவருக்கு உயர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இவர் தென் கொரியா நாட்டிற்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து முழுமையாக குணமடையும் வரை இவர் நடிப்பிலிருந்து ஓய்வெடுக்க முடிவு செய்திருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. உடல்நிலை அக்கறை தேவைப்படுவதால் சமந்தா நீண்ட நாள் ஓய்வு எடுக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர்.