பயங்கரவாதத்திற்கான நிதியை பாகிஸ்தான் கட்டுபடுத்தவில்லை என்றால் அந்நாடு கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுமென்று எப்.ஏ.டி.எப் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் நடைபெறும் கொடூர பயங்கரவாத தாக்குதலை அனைத்து நாடுகளும் வன்மையாக கண்டிப்பதுடன் , பயங்கரவாதத்தை ஒடுக்கு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றது என்றும் குற்றம் சாட்டினார். மேலும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நிதியும் அளிக்கின்றது என்று சொல்லப்பட்ட நிலையில் , சட்டவிரோதமாக பண பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கும் சட்ட விரோத நடவடிக்கைகளை பிரான்சு தலைநகர் பாரிசை தலைமையிடமாக கொண்ட சட்டவிரோத பணப் பரிமாற்ற கண்காணிப்புக் குழு கண்காணித்து வந்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டாவில் நேற்று சட்டவிரோத பணப் பரிமாற்ற கண்காணிப்புக் குழு_வின் கூட்டம் நடைபெற்றது. இதில் பயங்கரவாதத்திற்கு நிதி கிடப்பதை தடுப்பதில் பாகிஸ்தான் தோல்வி அடைந்து விட்டது. பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கும் நிதி கிடைப்பதையும் , சட்ட விரோத பணப்பரிவர்த்தனை களையும் தடுப்பதில் ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை வருகின்ற அக்டோபருக்குள் பாகிஸ்தான் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் அந்த நாடு கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுமென்று சட்டவிரோத பணப் பரிமாற்ற கண்காணிப்புக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.